Monday 24 August 2015

வேண்டும் சுதந்திரம்!



வேண்டும் சுதந்திரம்!

அன்னியச் செலாவணியை உயர்த்த
அயராது உழைக்கும் இந்தியனின் வாழ்க்கை சுதந்திரமா!

அரசியல் என்ற பெயரில்
அரசாங்கத்தையே ஏமாற்றும் இந்நிலை சுதந்திரமா!

பலகோடி இளைஞர்களின் இலட்சியக்
கனவை அடியோடு அறுக்கும் வஞ்சம் சுதந்திரமா!

விளை நிலத்தையும் விலை நிலமாக
மாற்றும் இக்கொடுஞ் செயல் சுதந்திரமா!

மூவண்ணக் கொடியேற்றி இரு இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டு
ஒற்றுமையாக வளரும் நமது நாளைய தலைமுறைக்காவது
கிடைக்கப் பெறுமா நாம் வேண்டும் சுதந்திரம்...!!!

இந்தியர்களை உயர்த்திய பின்னே
அன்னியர்களுக்கு உதவலாம்.

அரசியல் பிழைத்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து
அறிவியல் பாதையில் முன்னேற்றத்தைக் காண்போம்.

கல்வியை வியாபாரமாக்குவதை விடுத்து
வியாபாரத்தில் கல்வியைப் பயன்படுத்துவோம்.

பல மாடிகளைக் கட்டிப் பணம் பறிப்பதை விடுத்து
வரப்பு வெட்டி விவசாயம் புரிவோம்.

இலாபத்தை எதிர்பார்த்து இலட்சியம் அமைக்காமல்
லஞ்சத்தை ஒழிக்க ஒரு இலட்சியம் எடுப்போம்.

பணம் போன போக்கிலே மனத்தைப் போகவிடாமல்
மாற்றம் புரியும் குணத்தால் நம் மனத்தை மாற்றுவோம்!

சுதந்திரத்தை அடைய சுயநலத்தை விடுவோம்...!